ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு தனியார் துறைக்கு விடுமுறை அறிவிப்பு!

Eid Al Adha holiday for the private sector is from August 10 to 13, 2019, the Ministry of Human Resources and Emiratisation (MOHRE) has announced on Monday.

அமீரகத்தில் ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்டு 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்களுக்கு தனியார் துறைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த ஈத் அல் அதா விடுமுறையை திங்கள்கிழமை அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் Emiratisation (MOHRE) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அத்துடன் துபாயில் உள்ள மால்கள் திறக்கும் நேரத்தையும் நீட்டித்துள்ளது. அபுதாபியில் உள்ள மருத்துவமனைகளுக்கான நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஈத் அல் அதா நாளுக்கான பொது மற்றும் தனியார் துறைகளின் விடுமுறையை FAHR (Federal Authority for Government Human Resources) வெளியிட்டது.

FAHR யின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டின் துல் ஹஜ் மாதம் அரபா தினம் 9 ஆம் தேதி என்றும், இஸ்லாமிய மாதத்தின் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஈத் அல் அதா கொண்டாடப்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நான்கு நாட்கள் விடுமுறையால் தனியார் துறைகள் பயனடையும் என்று மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சகம் மற்றும் Emiratisation (MOHRE) உறுதிப்படுத்தியுள்ளது.

Loading...