UAE Tamil Web

அபுதாபி: 5 நாட்களுக்கு பார்க்கிங், டோல்கேட் கட்டணங்கள் வசூலிக்கப்படாது – ITC அறிவிப்பு..!

free parking

அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஈத் அல் அத்ஹா பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் திட்டத்தினை அறிவித்திருக்கிறது.

ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி காலை 7.59 மணி வரையிலும் மக்கள் இலவசமாக தங்களது வாகனங்களை பொது பார்க்கிங் இடங்களில் நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை காலத்தில் டர்ப் டோல்கேட் (Darb toll gate) கட்டணங்களை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்யும் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் எனவும் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை யாரும் பார்க்கிங் செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து மையம் அறிவுறுத்தியுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலான நேரங்களில் குடியிருப்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட தனியார் பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துதல் கூடாது எனவும் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வோருக்கு மவாகிஃப் ஆய்வாளர்கள் அபராதங்களை விதிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களுக்கு மட்டுமான பார்க்கிங் இடங்களை பிறர் உபயோகித்தால் 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். டிக்கெட் வழங்கப்பட்ட 4 மணிநேரம் கழித்து வாகனமானது காவல்துறையால் எடுத்துச்செல்லப்படும்.

ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

free parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap