UAE Tamil Web

துபாய் : ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களில் பேருந்து, டிராம், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கான நேரங்களை மாற்றிய RTA..!

rta

ஈத் அல் அத்ஹா விடுமுறை தினங்களை முன்னிட்டு பொதுப் பேருந்து, மெட்ரோ, டிராம் ஆகியவற்றிற்கான திருத்தப்பட்ட இயங்கு நேரத்தினை RTA அறிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வாகன தொழில்நுட்ப சோதனை மையங்கள் ஆகியவை ஜூலை 19-22 வரையிலான தேதிகளில் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட பொதுப் போக்குவரத்து நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துபாய் மெட்ரோ

– திங்கள் முதல் வியாழன் வரை (ஜூலை 19-22): காலை 5 மணி முதல் அதிகாலை 1 மணி வரை.

– வெள்ளிக்கிழமை (ஜூலை 23): காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை.

– சனி (ஜூலை 24): காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 வரை.

துபாய் டிராம்

– திங்கள் முதல் வியாழன் வரை (ஜூலை 19-22): காலை 6 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

– வெள்ளிக்கிழமை (ஜூலை 23): காலை 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

– சனி (ஜூலை 24): காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை.

பொதுப் பேருந்து

– கோல்ட் சூக் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள்: அதிகாலை 4.30 மணி முதல் 12.30 மணி வரை

– அல் குபைபா நிலையம்: அதிகாலை 4.15 முதல் அதிகாலை 1 மணி வரை

– சத்வா நிலையம் உள்ளிட்ட துணை நிலையங்கள்: அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை

– ரூட் C01: நாள் முழுவதும் இயங்கும்.

– அல் குசைஸ் நிலையம்: அதிகாலை 4.30 முதல் 12.04 வரை

– அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் நிலையம்: காலை 5.05 முதல் இரவு 11.30 மணி வரை

– ஜெபல் அலி நிலையம்: அதிகாலை 4.58 முதல் 12.15 வரை

நகரங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும் வணிகப் பேருந்துகள்

– அல் குபைபா போன்ற துணை நிலையங்கள்: காலை 6.40 மணி முதல் இரவு 10.20 மணி வரை

– யூனியன் சதுக்கம் அதிகாலை 4.25 மணி முதல் 12.15 வரை

– எதிசலாட் மெட்ரோ நிலையம்: காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

– அபு ஹெயில் மெட்ரோ நிலையம்: காலை 6.20 மணி முதல் இரவு 10.40 மணி வரை

– ஹட்டா நிலையம்: காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

rta
0 Shares
Share via
Copy link