UAE Tamil Web

துபாய்: 1500 வகையான பொருட்கள்; 65% வரையில் தள்ளுபடி – யூனியன் கோஆப்பரேஷனின் (Union Coop) அதிரடி ஆஃபர்..!

vegetables

அமீரகத்தின் மிகப்பெரிய கூட்டுறவு மையமான Union Coop துபாயிலுள்ள தனது கிளைகளில் எதிர்வரும் ஈத் அல் அத்ஹாவிற்கு 65 சதவீதம் வரையிலும் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 1500 விதமான உணவு மற்றும் பிற பொருட்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 15 முதல் ஜூலை 28 ஆம் தேதிவரையில் இந்த தள்ளுபடிக்காலம் அமலில் இருக்கும். இந்தத் தேதிகளில் 5 மில்லியன் திர்ஹம்ஸ் வரையில் தள்ளுபடிகள் அளிக்கப்பட இருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய யூனியன் கூப் நிர்வாகத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குனர் மஜிருதின் கான்,” துபாய் முழுவதிலுமுள்ள அனைத்து யூனியன் கூப் கிளைகளிலும் வருடந்தோறும் இதுபோன்ற தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அடிப்படை மற்றும் அதிக தேவையுள்ள பொருட்களை மக்கள் இந்த தள்ளுபடித் திருவிழா மூலம் மலிவான விலையில் வாங்கலாம். காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், இறைச்சி, இனிப்புகள், மசாலாப் பொருட்கள், அரிசி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 65% வரையில் தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றன” என்றார்.

மலிவு விலையில் தரமான பொருட்களை வழங்கி மக்களிடையே மகிழ்ச்சியைப் பரப்புவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

vegetables
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap