UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு ஷார்ஜாவில் இலவச பார்க்கிங் திட்டம் அறிவிப்பு..!

abudhabi parking

ஷார்ஜாவில் ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு ஜூலை 20-22 வரையிலான தேதிகளில் இலவச பார்க்கிங் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பொது பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம் என ஷார்ஜா நகராட்சி சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தத் திட்டம் அராஃபத் தினத்தன்று பொருந்தாது எனவும் நகராட்சி தெரிவித்துள்ளது. அராஃபத் தினத்தன்று (ஜூலை 19) வழக்கம்போல பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஏழு நாட்களும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் இடங்களுக்கு இந்த இலவசத் திட்டம் பொருந்தாது. இந்த இடங்கள் நீல நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

abudhabi parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap