UAE Tamil Web

இந்த வருடத்திற்கான ஈத் அல் அத்ஹா எப்போது? – கணிப்பை வெளியிட்ட சர்வதேச வானிலை ஆய்வுமையம்..!

mosque

சர்வதேச வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலின்படி பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈத் அல் அத்ஹாவின் முதல்நாளாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சர்வதேச வானிலை ஆய்வுமையத்தின் இயக்குனர் இன்ஜிநீர் முகமது ஷவ்கத் ஓதே,” ஜூலை 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 5.17 மணிக்கு அமீரகத்தில் துல் ஹஜ் மாதம் துவங்க வாய்ப்புள்ளது” என்றார்.

அரபு நாடுகள், ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிறை தென்படுவதைப் பொறுத்து இது உறுதிப்படுத்தப்படும் எனவும் ஓதே தெரிவித்துள்ளார்.

mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap