UAE Tamil Web

ஈத் அல் அத்ஹாவிற்கு மசூதிகளுக்குச் செல்வோர் கவனத்திற்கு: பெருநாள் தொழுகை நேரம் வெளியீடு ; இதெல்லாம் கட்டாயம் மக்களே..!

UAE Friday prayers

அமீரகத்தில் ஈத் அல் அத்ஹாவிற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மசூதிகள் மற்றும் திறந்தவெளி தொழுகை இடமான முசல்லாக்களுக்கு வருகை தரும் பிரார்த்தனையாளர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொழுகை நேரம்

  • அபுதாபி : காலை 6.02
  • அல் அய்ன் : காலை 5.56
  • மதீனத் சையத் : காலை 6.07
  • துபாய் : 5.57
  • ஷார்ஜா : 5.56
  • அஜ்மான் : 5.56

(ராஸ் அல் கைமா, புஜைரா, உம் அல் குவைனில் தொழுகை நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தவுடன் இந்த கட்டுரை புதுப்பிக்கப்படும்)

பிரார்த்தனையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

  • பிரசங்கம் உட்பட தொழுகையின் மொத்த நேரம் 15 நிமிடங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொழுகை முடிந்தவுடன் மசூதிகள் மற்றும் முசல்லாக்கள் உடனடியாக மூடப்படும்.
  • தொழுகைக்கு முன்போ அல்லது பின்னரோ வழிபாட்டாளர்கள் மசூதிகள் மற்றும் முசல்லாக்களில் கூடுவதற்கு அனுமதியில்லை.
  • சமூக இடைவெளியினை கடைபிடிக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்கள் மசூதிகள், அதன் வெளிப்புறங்கள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் ஒட்டப்படும்.
  • 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தொழுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் தொழுகையில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கைகுலுக்குதல், கட்டியணைத்தல் போன்ற செயல்கள் கூடாது.
  • வாஷ்ரூம்கள் மூடப்பட்டிருக்கும்.
UAE Friday prayers
0 Shares
Share via
Copy link