UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா : வாட்சாப் மூலமாகவே குர்பானியைப் பெறலாம் – துபாயில் துவங்கப்பட்ட புதிய சேவை..!

sacrifice

ஈத் அல் அத்ஹாவிற்கு மக்கள் வாட்சாப் மூலமாகவே தங்களுக்கான குர்பானியைப் பெறும் வகையில் துபாய் டிஜிட்டல் ஆணையம் மற்றும் தர் அல் பெர் (Dar Al Ber) அமைப்பு ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

துபாய்நவ் (DubaiNow) அப்ளிகேஷனில் இஸ்லாம் மற்றும் டொனேஷன் (Islam and Donations) பிரிவில் இந்த வசதி அமைந்துள்ளது. மக்கள் இதன் மூலமாக தங்களுக்கான குர்பானிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அப்ளிகேஷ வழியாகவே அதற்கான பணத்தையும் செலுத்தலாம்.

ஸ்மார்ட் துபாய் அரசு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விசாம் லூடா இதுகுறித்துப் பேசுகையில்,”பல்வேறு இடங்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளை அளிக்கும் வகையில் துபாய்நவ் அப்ளிகேஷன் விரிவுபடுத்தப்பட்டுவருகிறது. மக்கள் இந்த அப்ளிகேஷன் வாயிலாக உதியா (Udhiyah) சேவைகளைப் பெற்று நேரத்தினை மிச்சப்படுத்தலாம். இந்த புதிய வசதியின் வருகையினால் மக்கள் தொண்டு மையங்களுக்குச் சென்று சமூக இடைவெளியுடன் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மனிதாபிமான நடவடிக்கைகள் உட்பட அனைத்து துறைகளும் துபாயில் டிஜிட்டல்மயமாகி  வருகின்றன” என்றார்.

தர் அல் பெர் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர் டாக்டர் முகமது அல் முஹைரி இதுகுறித்துப் பேசுகையில்,” கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குர்பானியை நிகழ்த்துவதற்கு தேவை அதிகமாக உள்ளது” என்றார்.

30 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 130 வகையான சேவைகளை துபாய் நவ் அப்ளிகேஷன் வழங்கிவருகிறது.

sacrifice
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap