UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா: 520 சிறைக்கைதிகளுக்கு விடுதலை அளித்த துபாய் ஆட்சியாளர்..!

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) துபாயின் தண்டனை மற்றும் திருத்துதல் மையங்களில் உள்ள 520 சிறைக்கைதிகளை ஈத் அல் அத்ஹாவுக்கு முன்னதாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கைதிகளுக்கு தங்கள் வாழ்வைப் புதிதாகத் தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த விடுதலை உத்தரவின் நோக்கமாகும் என்று துபாயின் அட்டர்னி ஜெனரல் இசாம் இசா அல் ஹுமாய்தான் (Issam Issa Al Humaidan) தெரிவித்துள்ளார். கைதிகளை விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாகச் செய்யப்படும். இதனால் அவர்கள் வீடு திரும்பி ஈத் அல் அத்ஹாவை அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று அமீரகத்தின் ஜனாதிபதியான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ( Sheikh Khalifa bin Zayed Al Nahyan) 855 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap