UAE Tamil Web

மசூதிகளில் ஈத் அல் அத்ஹா தொழுகைக்கு அனுமதி – ஆனால் இவர்கள் வரவேண்டாம் : அரசின் புதிய அறிவிப்பு..!

mosque

கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மசூதிகள் மற்றும் திறந்தவெளி இடங்களில் (முசல்லாக்கள்) ஈத் அல் அத்ஹா தொழுகை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்போம்.

  • பிரசங்கம் உட்பட தொழுகையின் மொத்த நேரம் 15 நிமிடங்களாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தொழுகை முடிந்தவுடன் மசூதிகள் மற்றும் முசல்லாக்கள் உடனடியாக மூடப்படும்.
  • தொழுகைக்கு முன்போ அல்லது பின்னரோ வழிபாட்டாளர்கள் மசூதிகள் மற்றும் முசல்லாக்களில் கூடுவதற்கு அனுமதியில்லை.
  • சமூக இடைவெளியினை கடைபிடிக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்கள் மசூதிகள், அதன் வெளிப்புறங்கள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் ஒட்டப்படும்.
  • 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தொழுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் தொழுகையில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
mosque
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap