UAE Tamil Web

துபாய்: இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் 25 திர்ஹம்ஸ் பரிசு..!

YEEPEE

துபாயில் வசித்துவரும் மோனிஷ் சந்திரமணி மற்றும் ஜதின் ஷர்மா என்னும் இரு இளைஞர்கள் ஈபே (Yeepeey) என்னும் இணைய மளிகை பொருட்கள் விற்பனை அப்ளிகேஷனை (e-grocery) உருவாக்கியுள்ளார்கள். இதனை டவுன்லோடு செய்வதன்மூலம் உங்களுக்கு 25 திர்ஹம்ஸ் ஈதி பரிசு (Eidi money) கிடைக்கும்.

துபாயில் பிறந்துவளர்ந்த இந்த இளம் தொழில் முனைவோர்களான இந்த இளைஞர்கள் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் கொண்டாடுவதாக தெரிவிக்கின்றனர். இந்த அப்ளிகேஷன் மூலமாக துபாயில் வசிக்கும் அனைவரும் 25 திர்ஹம்ஸ் பரிசினைப் பெறலாம் என இந்த இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

“உலகத்தில் மிகவும் சகிப்புத்தன்மை நிறைந்த நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும். இங்கு அனைத்து சமூக மக்களும் மகிழ்ச்சியுடன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை இதுவே ஒன்றிணைக்கிறது. வணிகம் என்பது மக்களைப் பற்றியது, பொதுவாக நாம் எவ்வாறு சமூகத்திற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? என்பதுதான் எங்களுடைய பயணத்தின் முதற்புள்ளி” என்கிறார் ஜதின்.

25 திர்ஹம்ஸ் பரிசு குறித்துப் பேசிய மோனிஷ்,” இந்த அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோடு செய்து, அதில் பதிவு செய்தால் உங்களுடைய வாலட்டில் (wallet) 25 திர்ஹம்ஸ் பணம் உடனடியாக ஏறிவிடும்” என்றார்.

அருகில் உள்ள மளிகைக் கடைகள், சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்கெட்களில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“பொருட்களை நீங்கள் வாங்கியபிறகு, உங்களுடைய வாலட்டில் இருக்கும் பணத்தினைக் கொண்டு அதற்கான தொகையை அளிக்கலாம்” என ஜதின் தெரிவித்தார்.