UAE Tamil Web

ஷார்ஜா: ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் திட்டத்தை அறிவித்தது அரசு..!

parking

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில்  விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஷார்ஜா முழுவதிலும் உள்ள பொது பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்துகொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், கட்டணம் வசூலிக்கக்கூடிய பார்க்கிங் இடங்களுக்கு இந்த இலவச பார்க்கிங் திட்டம் பொருந்தாது. அதாவது,

அல் ஷுவைஹீன் (Al Shuwaiheen) மற்றும் அல் ஷோயோக் (Al Shoyoukh) பகுதியில் உள்ள அல் ஹிஸ்ன் – பேங்க் காம்பிளக்ஸ் பகுதி (Al Hisn Street -bank complex),

அல் ஷுவைஹீன் (Al Shuwaiheen) பகுதியில் உள்ள கார்னிச் தெரு – இரு புறமும் (Corniche street)

அல் ஜுபைல் பகுதியில் உள்ள கைஸ் இப்னு அபி சசாஹ் தெரு (Qays Ibn Abi Sa’sa’ah street)

மத்திய சூக் பார்க்கிங் பகுதிகள் (Central Souq parking spaces)

கார்னிச் தெரு –  காலித் லகூன் பக்கம் (Corniche street – Khalid Lagoon side)

யூனிவெர்சிட்டி சாலை (University City Road) – முவெய்லே வணிகப் பகுதி.

மேற்கண்ட இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

பார்க்கிங் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நகராட்சி அபராதம் விதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா நகராட்சியின் பொதுப் பார்க்கிங் துறை இயக்குனர் அலி அஹமது அபு காஸின்,”பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் விடுமுறை தினங்களில் தங்களது வாகனங்களை எளிமையாக பார்க்கிங் செய்ய தேவையான முயற்சிகளை எடுத்துள்ளோம். மேலும் முக்கிய சுற்றுலா மையங்களில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரட்டை பார்க்கிங் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகிறார்களா? என்பதைக் கண்காணிக்க தொடர்ந்து ஆய்வுக்குழு ரோந்துப் பணியில் ஈடுபடும்” எனத் தெரிவித்தார்.

குடியிருப்பு வாசிகள் ஏதேனும் தகவல் தெரிவிக்கவோ அல்லது புகாரளிக்கவோ 993 எனும் ஹாட்லைன் எண் மூலமாக நகராட்சியைத் தொடர்புகொள்ளலாம்.

parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap