UAE Tamil Web

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத்தொழுகை நடத்திய அமீரக தலைவர்கள்..!

ras al khaimah

இன்று அமீரகத்தில் ஈத் அல் பித்ர் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாக கடைபிடிக்கவேண்டும் என அபுதாபி மற்றும் துபாய் காவல்துறை சமீபத்தில் மக்களை எச்சரித்திருந்தது.

இந்நிலையில் இன்று அமீரக ஆட்சியாளர்கள் அனைவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் உலகமெங்கிலும் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஈத் அல் பித்ர் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களின் மூலமாக தெரிவித்திருந்தனர்.

இரண்டு வருடங்களில் முதன்முறையாக இம்முறை ஈத் அல் பித்ர் சிறப்புத் தொழுகை மசூதிகளில் நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகையில் அபுதாபியின் பட்டத்து இளவரசர், அஜ்மான், ராஸ் அல் கைமா ஆட்சியாளர், அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களைக் கீழே காணலாம்.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் ஈத் அல் பித்ர் தொழுகை நடத்திய அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்.

abudhabi prince
Image Credit: Hamad Al Kaabi / Ministry of Presidential Affairs

ஈத் அல் பித்ர் தொழுகையில் கலந்துகொண்ட அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத்.

sheikh abdulla
Image Credit: Mohamed Al Hammadi / Ministry of Presidential Affairs

உச்ச சபையின் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி அவர்கள் அஜ்மானில் உள்ள அல் சாஹேர் மாளிகையில் ஈத் அல் பித்ர் தொழுகையில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ajman ruler
Image Credit: wam

குசாமில் உள்ள ஈத் கிராண்ட் முசல்லாவில் ஈத் அல் பித்ர் தொழுகை நடத்திய உச்ச சபையின் உறுப்பினரும் ராஸ் அல் கைமா ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி.

ras al khaimah
Image Credit: wam
ras al khaimah
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap