UAE Tamil Web

துபாய் : ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ, பேருந்து, டிராம் ஆகியவை இயங்கும் நேரத்தில் மாற்றம்..!

Dubai-Metro_

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு துபாயில் உள்ள பேருந்துகள், டிராம், மெட்ரோ மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் ஆகியவை இயங்கும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மாற்றப்பட்ட நேரங்கள் குறித்து கீழே காண்போம்.

பேருந்துகள்

முதன்மை பேருந்து நிலையங்கள் அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணிவரையில் இயங்கும். அல் குபைபா பேருந்து நிலையம் அதிகாலை 4.15 முதல் அதிகாலை 1 மணிமுதல் இயங்கும்.

துணை பேருந்து நிலையங்கள் காலை 4.30 மணிமுதல் இரவு 11 மணிமுதல் இயங்கும். இருப்பினும் C01 முழு நேரமும் இயங்கும்.

அல் குசைஸ் பேருந்து நிலையம் அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12.04 மணிவரையில் இயங்கும். அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் நிலையம் காலை 5.05 முதல் இரவு 11.30 மணிவரையில் இயங்கும்.

ஜெபல் அலி பேருந்து நிலையம் அதிகாலை 4.58 முதல் நள்ளிரவு 12.15 மணிவரை இயங்கும்.

துபாய் மெட்ரோ

கிரீன் லைன்

புதன் – வியாழக்கிழமை : காலை 5.30 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையில் செயல்படும்.

வெள்ளிக்கிழமை: காலை 10 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையிலும் இயங்கும்.

சனிக்கிழமை: காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையில் செயல்படும்.

ரெட் லைன்

புதன் – வியாழக்கிழமை : காலை 5 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையில் செயல்படும்.

வெள்ளிக்கிழமை: காலை 10 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையிலும் இயங்கும்.

சனிக்கிழமை: காலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையில் செயல்படும்.

துபாய் டிராம்

புதன் – வியாழக்கிழமை : காலை 6 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையில் செயல்படும்.

வெள்ளிக்கிழமை: காலை 9 மணிமுதல் அடுத்தநாள் அதிகாலை 1 மணிவரையிலும் இயங்கும்.

சனிக்கிழமை: காலை 6 மணிமுதல் அதிகாலை 1 மணிவரையில் செயல்படும்.

வாகனங்களின் தொழில்நுட்ப சோதனை மையங்கள்

வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள், சேவை வழங்கு மையங்கள் (வாகன தொழில்நுட்ப சோதனை மையங்கள்) ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் மூடப்படும்.

உம் ராமூல், தேரா, அல் பார்ஷா, அல் மனாரா மற்றும் RTA தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட் ஹேப்பினஸ் செண்டர் ஆகியவை வழக்கம்போல தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai-Metro_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap