UAE Tamil Web

அமீரகம்: ஒவ்வொரு எமிரேட்டிற்குமான ஈத் அல் பித்ர் தொழுகை நேரம் வெளியீடு : என்னென்ன கட்டுப்பாடுகள்?

Eid-prayer_

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் பண்டிகைக்கான தொழுகை நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் (புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை) ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் துபாய் முழுவதிலும் ஈத் அல் பித்ர் சிறப்பு தொழுகை நடைபெறும் ஈத் முசல்லாக்களின் பட்டியலை இஸ்லாமிய விவகாரத்துறை மற்றும் தொண்டுப் பணிகள் துறையின் இணையதளத்திலோ அல்லது அதன் சமூக வலைத்தளப் பக்கங்களிலோ காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதற்குமான ஈத் அல் பித்ர் தொழுகை நேரம்

  • அபுதாபி: காலை 05.57
  • அல் அய்ன்: காலை 05.50
  • மதினத் சயீத்: காலை 06.01
  • துபாய்: காலை 05.52
  • ஹட்டா: காலை 05.49
  • ஷார்ஜா: காலை 05.51
  • ராஸ் அல் கைமா: காலை 05.48 மணி
  • புஜைரா: காலை 05.48 மணி
  • உம் அல் குவைன்: காலை 05.50
  • அஜ்மான்: காலை 05.51

கட்டுப்பாடுகள்

துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை மற்றும் தொண்டுப் பணிகள் துறை தொழுகையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை கீழே காணலாம்.

  1. துபாயில் உள்ள ஈத் முசல்லாக்கள் அனைத்தும் ஈத் அல் பித்ர் தொழுகை நடைபெறுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு திறக்கப்படும். தொழுகை முடிந்த பின்னர் அவை உடனடியாக மூடப்படும்.
  2. பெண்களுக்கான தொழுகை பகுதிகள் மறு அறிவிப்பு வரும் வரையில் மூடப்பட்டிருக்கும்.
  3. தொழுகையாளர்கள் ஈத் முசல்லாக்களின் நுழைவு அல்லது வெளியே செல்லும் பாதைகளில் கூட்டம் கூடக்கூடாது.
  4. தொழுகைக்கு முன்போ அல்லது நடந்து முடிந்த பின்னரோ மசூதியின் வளாகத்திற்குள் கூட்டம் கூடுதல் கூடாது.
  5. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் தங்களுக்கான தொழுகை விரிப்பைத் தாங்களே கொண்டுவருதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eid-prayer_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap