34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் வங்கிகளுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை அறிவிப்பு!

Eid-al-Fitr-Egypt-2015

அமீரகத்தில் வங்கிகளுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை, ரமலான் 29 ஆம் தேதியான மே 22 முதல் ஷவ்வால் 3 ஆம் தேதியான மே 26 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அமீரகத்தின் பிறை பார்க்கும் கமிட்டி மே 22 ஆம் தேதி கூடி பிறை பார்த்த பின்னர், இஸ்லாமிய மாதங்களில் ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வால் துவங்குவதை அறிவிப்பார்கள். ஷவ்வால் மாதத்தின் முதல் நாளே ஈத் அல் பித்ர் எனக் கொண்டாடப்படுகிறது.

ஈத் தினம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

மே 22 அன்றே பிறை தென்பட்டால் அடுத்தநாள் அதாவது 23 ஆம் தேதி ஈத் தினமாக அறிவிக்கப்படும். அப்படியில்லையென்றால் மே 24 ஈத் என அறிவிக்கப்படும். 29 அல்லது 30 நாட்களை உள்ளடக்கிய இஸ்லாமிய மாதங்கள் நிலவுச் சுழற்சியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

Eid al fitr
Image Credit : gulfnews

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மேம்பாட்டுக்கான மத்திய ஆணையம் அமீரகத்தில் இஸ்லாமிய நாட்காட்டியின்படி 29 ரமலான் (மே 22) முதல் 3 ஷவ்வால் (மே 26) வரை ஈத் அல் பித்ர் விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!