துபாயில் 50 தோட்டக்காரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அந்நாட்டின் மூத்த குடிமக்கள் மதிய உணவு வழங்கி ஆச்சரியமடைய செய்துள்ளனர்.
Emaar Community Management (ECM) உடன் இணைந்து, 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குழு சாலையில் வேலை பார்க்கும் உழைப்பாளிகளுக்கு மதிய உணவை வழங்கியது. பிப்ரவரி மாதம் மனித சர்வதேச சகோதரத்துவத் தினத்தை குறிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்டக்கார ஊழியர்கள் தங்களின் வழக்கமான பணியை செய்துக்கொண்டிருந்த போது, திடீரென Emaar Community Management உடன் இணைந்து வந்த மூத்த குடிமக்கள் குழு, மதிய உணவு ஊழியர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்ததால், சீருடையை கழற்றிவிட்டு வழக்கமான உடைகளை மாற்றும்படி ஊழியர்களிடம் கேட்டனர்.
இதனையடுத்து தோட்டக்கார ஊழியர்களை அல் பர்ஷாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்ற ECM குழு மதிய உணவு வாங்கி கொடுத்தனர்.
இது குறித்து தெரிவித்த கோல்டன் ஏஜ் குழுமத்தின் நிறுவன உறுப்பினர் நசீம் துரானி, “EMAAR உடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறோம், அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை காட்டுகின்றனர். Emaar தனது சமூக ஊழியர்களை கௌரவிக்க எடுக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும், அதுமட்டுமின்றி சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும் எங்களுக்கு வழங்கியுள்ளது.
தோட்டக்கார ஊழியர்களில் ஒருவரான யாகூப், “இந்த உணவகத்தின் உணவை நான் விரும்பினாலும், எனது நண்பர்களுடன் வருவதற்கு உண்மையில் வாய்ப்பு கிடைக்காது. எங்கள் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட உதவிய கோல்டன் ஏஜ் குரூப் மற்றும் EMAAR குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை உண்மையிலேயே நன்கு கவனித்துக் கொண்டனர்” என்றார்.