UAE Tamil Web

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மெசெஞ்சர் பணிக்கு ஆள் தேவை – தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு..!

embassy of India

அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளது. அதில், தூதரகத்தில் மெசஞ்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:

பணி: மெசஞ்சர்

குறைந்தபட்ச கல்வித்தகுதி: உயர்நிலைக் கல்வி (பத்தாம் வகுப்பு)

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட் நகல்
  • விசா பக்க நகல்
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஆகியவற்றை தங்களது CV ல் இணைத்து தபால் அல்லது நேரடியாக தூதரகத்தில் சமர்ப்பிக்கலாம்.

தபால் அனுப்பவேண்டிய முகவரி:

Head Of Chancery,

Embassy of India, Plot No:10,

Diplomatic Area, Airport Road,

P.O.Box No: 4090, Abudhabi, UAE.

நேரில் சென்று CV க்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட முகவரியில் உள்ள தூதரகத்திற்கு நேரில் செல்லலாம்.

ஏப்ரல் 20 வரை மட்டுமே இப்பணிக்காக விண்ணப்பிக்க முடியும். அதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

தூதரகத்தின் ஆள்சேர்ப்பு அறிக்கையை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும்.