UAE Tamil Web

துபாய்க்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய தூதரகம்!

International flights suspended till may 3

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு ஓடுபாதை மூடப்படுவதால் சுமார் 1,000 விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரலுக்கு (DWC) விமான நிலையத்திற்கும் ஷார்ஜா விமான் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்படும் என்று துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒரு ஓடுபாதையை மே முதல் ஜூன் மாதம் வரை மூடப்பட உள்ளது.

முன்னதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், ஷார்ஜா மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (DWC) விமான நிலையத்தில் தரையிரக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் திறமையான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காகவும் விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மே 9 முதல் ஜூன் 22 வரை பராமரிப்பு பணி நடைபெறும் என்று விமான நிலையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap