ஷாஹீன் புயல் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு அசாதாரண வானிலையை அமீரகம் எதிர்கொள்ளலாம் என அமீரக வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் துபாயில் வசிப்பவர்கள் வானிலை மாற்றத்தினால் ஏற்படும் அவசர தேவைகளின் போது 800900 என்ற எண்ணிற்கு கால் செய்யுமாறு துபாய் முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் துபாய் முனிசிபாலிட்டி அப்ளிகேஷன் வாயிலாகவும் உதவியைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு உதவி செய்ய தங்களது நிபுணர் குழு 24 மணிநேரமும் தயாராக இருப்பதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
In anticipation of weather changes and any emergency, #DubaiMunicipality‘s specialized teams are ready to answer your calls around the clock to ensure the UAE residents’ safety. For your emergencies, contact us via the municipality’s mobile app or dial 800900 pic.twitter.com/Yxgzy0fvK4
— بلدية دبي | Dubai Municipality (@DMunicipality) October 3, 2021
முன்னதாக அமீரகத்தின் கடற்கரை, தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
