துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை குறைந்தபட்சம் ஆகஸ்ட் 7 ஆம் தேதிவரையில் தொடரும் என அறிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களில் மேற்கண்ட நாடுகளின் வழியாக பயணித்தவர்களுக்கும் (டிரான்ஸிட் பயணிகள்) இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், கோல்டன் விசா வைத்திருப்போருக்கு மட்டும் இந்தத் தடையில் விலக்கு உண்டு எனவும் அவர்கள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை ஆகஸ்ட் 2 ஆம் தேதிவரையில் தொடரும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.