UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாய் – சென்னை விமான சேவை ரத்து – எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!

சென்னையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக துபாய் – சென்னை மற்றும் சென்னை – துபாய் விமான சேவைகளை ரத்து செய்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

சென்னையில் இன்று மற்றும் நாளை (நவம்பர் 10, 11) பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து எமிரேட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

EK542 : நவம்பர் 10 அன்று துபாய் – சென்னை பயணிக்கும் விமானம்.

EK543 : நவம்பர் 11 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.

EK544 : நவம்பர் 11 அன்று துபாய் – சென்னை பயணிக்கும் விமானம்.

EK543 : நவம்பர் 11 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.

அதேபோல இந்த இரு நாட்களில் எமிரேட்ஸ் இயங்கும் எந்தப் பகுதியிலிருந்தும் சென்னைக்கு விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பயணிகள் தங்களது டிராவல் ஏஜெண்டை தொடர்புகொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 Shares
Share via
Copy link