UAE Tamil Web

அமீரகம் – சவூதி இடையே மறுஅறிவிப்பு வரும் வரையில் விமானங்கள் இயக்கப்படாது – எமிரேட்ஸ், எதிஹாட் அறிவிப்பு..!

Emirates Etihad

கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் இருந்து சவூதி வரவும் சவூதியில் இருந்து மக்கள் அமீரகம் செல்லவும் இடைக்காலத் தடை விதிப்பதாகவும் இந்நடைமுறை ஜூலை 4 ஆம் தேதி இரவு 11 மணிமுதல் (சவூதி நேரப்படி) நடைமுறைக்கு வருவதாகவும் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி, அமீரகம் – சவூதி இடையிலான விமானப் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும்வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்களது பயண திட்டத்தை மாற்றுவது குறித்து அவர்களுக்கு தகவல்களை வழங்கிவருவதாக எதிஹாட் தெரிவித்துள்ளது.

“சவூதி அரேபியாவின் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள ஆணையின் அடிப்படையில் அமீரகத்திலிருந்து சவூதி செல்லும் மற்றும் சவூதியில் இருந்து அமீரகம் வரும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும்வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன” என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Emirates Etihad
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap