சென்னையில் பெய்துவரும் பேய் மழை காரணமாக நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை துபாய் இடையிலான விமானப் போக்குவரத்தை ரத்து செய்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தடையை நவம்பர் 12 ஆம் தேதியும் அந்நிறுவனம் நீட்டித்திருக்கிறது. அதன்படி, ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலைக் கீழே காணலாம்.
EK543 : நவம்பர் 11 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.
EK544 : நவம்பர் 11 அன்று துபாய் – சென்னை பயணிக்கும் விமானம்.
EK543 : நவம்பர் 11 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.
EK543 : நவம்பர் 12 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.
EK544 : நவம்பர் 11 அன்று துபாய் – சென்னை பயணிக்கும் விமானம்.
EK545 : நவம்பர் 12 அன்று சென்னை – துபாய் பயணிக்கும் விமானம்.
அதேபோல இந்த இரு நாட்களில் எமிரேட்ஸ் இயங்கும் எந்தப் பகுதியிலிருந்தும் சென்னைக்கு விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பயணிகள் தங்களது டிராவல் ஏஜெண்டை தொடர்புகொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
