UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – UAE இடையேயான பயணத்தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு – எமிரேட்ஸ் அறிவிப்பு..!

Emirates

கொரோனா பரவல் காரணமாக கொரோனா இந்தியா – அமீரகம் இடையேயான விமானப்போக்குவரத்து கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் தடை செய்யப்படுவதாக அமீரக அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்தது.

அதற்குப் பிறகு ஜூன் 23 ஆம் தேதி இந்தத் தடை விலக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அதன்பிறகு தடையானது மேலும் நீட்டிக்கப்பட்டது. துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூலை 7 ஆம் தேதி முதல் இந்தியா – அமீரகம் இடையே விமான சேவையை துவங்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மறுஅறிவிப்பு வரும்வரையில் இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாது என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது.

இதனிடையே இன்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை 15 ஆம் தேதிவரையில் இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணம் செய்தவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமீரக குடிமக்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கு இந்தத் தடையில் விலக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அமீரக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Emirates
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap