UAE Tamil Web

அமீரகத்தின் புகழ் பெற்ற Emirates நிறுவனம்.. உலகளவில் 30 நகரங்களில் இருந்து ஆட்களை பணியமர்த்த திட்டம் – எப்படி Apply செய்வது? லிங்க் உள்ளே!

உலக அளவில் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம் தான் எமிரேட்ஸ், 1985ம் ஆண்டு நமது அமீரகத்தை தலைமையகமாக கொண்டு உருவான ஒரு நிறுவனம் இது. இப்போது எதிர்வரும் ஜூன் மாதம் 2022 வரை உலகெங்கிலும் உள்ள 30 நகரங்களிலிருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

எமிரேட்ஸ் குழுமத்தின் மனித வளங்களுக்கான நிர்வாக துணைத் தலைவர் அப்துல் அசிஸ் அல் அலி பேசுகையில்.. “Cabin Crewல் ஆர்வமுள்ள எவருக்கும் எமிரேட்ஸை விட அற்புதமான விமான நிறுவனம் வேறில்லை என்றார்.

மேலும் நாங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேபின் குழுவினருக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியதிலிருந்து மக்களிடம் இருந்து பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான கூறவேண்டும்.

இந்த வேலைக்கான விண்ணப்ப செயல்முறையின் சில பகுதிகள் ஆன்லைனில் செயல்படுத்தப்படும்போதிலும், ​​எங்களால் முடிந்த போதெல்லாம் எங்களிடம் விண்ணப்பிக்கும் Candidatesகளை நேரில் சந்திக்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்து வருகின்றோம்.

30க்கும் அதிகமான நகரங்களுக்கு சென்று எங்கள் புதிய Cabin Crew பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார். அனைத்து எமிரேட்ஸ் பணியாளர்கள் துபாயில் தங்கவைக்கப்படுகின்றனர். நிறுவனத்தால் வழங்கப்படும் தங்குமிடம், வரியில்லா சம்பளம் மற்றும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு.

ஆர்வமுள்ளவர்கள் மற்றும் எமிரேட்ஸ் கேபின் க்ரூ ரோல் பற்றி மேலும் படிக்க மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக் இந்த லிங்கை பயன்படுத்தலாம். எமிரேட்ஸ் எந்த 30 நகரங்களில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளது என்பதை குறிப்பிடவில்லை.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap