அமீரகம் மற்றும் இந்தியாவுக்கான நேரடி விமான போக்குவரத்து சேவையை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படுத்த இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் சென்னைக்கு வாரத்திற்கு 21 விமானங்களை செயல்படுத்த உள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் 9 நகரங்களுக்கு சேவையை வழங்கி அதிகரிப்பதன் மூலம் வாரத்திற்கு 170 விமானங்கள் இயங்கவுள்ளது. அதற்கான முன்பதிவு மே 31, 2022 வரை நீட்டிப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.