UAE Tamil Web

இந்த 12 நாடுகளை சேர்ந்த பயணிகள் எங்களோடு பயணிக்கலாம் – எமிரேட்ஸ் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை ஒரு கை பார்த்தது மட்டுமின்றி ஊர் விட்டு ஊர் சென்றவர்களையும் கடுமையாக சோதித்துவிட்டது. கொரோனா காரணமாக சொந்த ஊர் சென்ற பலரும் இப்போது அமீரகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதே வேலையில் மருத்துவ சிகிச்சை, அலுவல் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அமீரக ரெசிடன்சி விசா வைத்திருந்தவர்களும் தற்போது அமீரகத்திற்கு திரும்ப முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நாளை முதல் இந்தியாவில் உள்ள அமீரக ரெசிடன்சி விசா வைத்திருப்பவர்கள் நேரடியாக அமீரகத்திற்குள் நுழைய அரசு அனுமதி வழங்கியதால் பலரும் பெருமூச்சு விட்டுள்ளனர். பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தங்கள் விமான சேவை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, உகாண்டா, நேபால் ஆகிய நாடுகளில் இருந்து நேரடியாக அமீரகத்திற்குள் நுழைய எமிரேட்ஸ் விமான சேவையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Emirates Resume Flights to 58 Cities, Negative COVID-19 Test Required on  Certain Flights - SamChui.comஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், சாம்பியா நாட்டினர் அமீரகத்தில் Transitக்காக வந்தால் மட்டும் எமிரேட்ஸ் விமானத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க விரும்புவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை வைத்திருக்க வேண்டும். அதேபோல விமானத்திற்கு பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பே 2வது தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர் என எமிரேட்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

9 Shares
Share via
Copy link