UAE Tamil Web

ஒரு நபருக்காக இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானம் – இதுதான் காரணமா?

flight

மும்பையில் இருந்து துபாய்க்கு ஒரே ஒரு நபருடன் அதிகாலை 4:30 மணிக்கு(IST) எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தின் எண் EK-501 ஆகும்.

கடந்த ஏப்ரல் 24 முதல் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கு ஒரு சில விதிவிலக்குகளுடன் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விதிவிலக்கில் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், அமீரக குடிமக்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் அமீரகம் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.

கடந்த ஞாயிறு அன்று அமீரக அறிக்கை ஒன்றில் ஜூன் 14 வரை இந்தியர்கள் அமீரகத்தில் நுழைவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் துபாயை சேர்ந்த ஸ்டார் ஜெம்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவேஷ் ஜாவேரி எமிரேட்ஸ் விமானம் மூலம் அமீரகத்திற்கு தனி நபராக பறந்துள்ளார். இவரிடம் கோல்டன் விசா இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்திற்கு இவர் 909 திர்ஹம்ஸ் செலவழித்துள்ளார். இதுகுறித்து பவேஷ் வெளியிட்ட வீடியோ பதிவில், “இன்று நான் மிகவும் விசேஷமானவன். ஏனென்றால் மும்பையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் நான் மட்டுமே பயணம் செய்ய போகிறேன்” என்று கூறியிருந்தார்.

விமான நிலையத்தில் ஏமிரேட்ஸ் கேபின் குழுவினர் அவரை அன்புடன் வரவேற்று, விமானத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு விமான பணிப்பெண்கள் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டி அவரை வரவேற்றனர்.

இதுகுறித்து விமான பைலட் கூறும்போது, “நான் வழக்கமாக அதிக பயணிகளுக்கு அறிவிப்பு வழங்குவேன். ஆனால் இன்று நீங்கள் மட்டுமே இருப்பதால் உங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வழங்க போகிறேன். இந்த விமானம் குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

எமிரேட்ஸ் விமானத்தின் இருக்கைகள் குறித்த அடிப்படை தகவல்களை வெளியிட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

flight
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap