துபாயில் வலைதளங்களில் பரவும் போலியான விளம்பரம் பற்றிய எச்சரிக்கை.!

Emirates Post warns residents of fake promotion

துபாய் குடியிருப்பாளர்களுக்கு எமிரேட்ஸ் போஸ்ட் (Emirates Post UAE) போலியான விளம்பரம் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S5 ஸ்மார்ட்போனை பரிசாக வெல்லலாம், என்ற ஒரு போலியான தகவல் அமீரக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த மோசடி கும்பல் SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் ஒரு குறுஞ்செய்தியை அமீரக குடியிருப்பாளர்களுக்கு அனுப்பி, இந்த ஸ்பெஷல் புரொமோஷனில் பங்கு கொள்ளும் படி முதலில் அழைப்பு விடுகின்றனர்.

பிறகு உங்களுடைய தனிப்படட தகவல்கள் சேகரிக்க, நீங்கள் சாம்சங் கேலக்ஸி S5 ஸ்மார்ட் மொபைலை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக உங்களிடம் ஆசையை தூண்டுகின்றனர்.

இதைப்பற்றி EmPost கூறுகையில், எமிரேட்ஸ் போஸ்ட் பெயரை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சாம்சங் S10 மொபைலை வெற்றி பெறலாம் என்ற முற்றிலும் போலியான பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளது. மேலும், இது எமிரேட்ஸ் போஸ்டில் இருந்து வந்த விளம்பரம் அல்ல என்றும், இதற்கு இந்த குழுமம் பொறுப்பாகாது என்றும் கூறியுள்ளது.

இது போன்ற போலியான லிங்க் மற்றும் குறுஞ்செய்திகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக அதை அழித்து விடுங்கள் என்றும், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும் படி அறிவுரை கூறியுள்ளது.

மேலும், சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த போலியான தகவலை உருவாக்கியவர் யார் என்ற கோணத்தில் சட்ட ரீதியாக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.

Loading...