UAE Tamil Web

அடேங்கப்பா..எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்தால் Expo 2020 டிக்கெட் இலவசம்!

உலகின் டாப் ஹாலிடே ஸ்பாட்டாக திகழும் துபாயில் Expo 2020 எனும் பிரமாண்டமான கண்காட்சி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. உலக வணிகர்களின் சந்தையாக திகழப்போகும் இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த கண்காட்சியை கண்டுகளிப்பதற்காகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

My Expo – Register and Login | Expo 2020 Dubai

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடைபெறும் உலகின் முன்னணி கண்காட்சிக்கு இலவசமாக டிக்கெட் பெற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பயணிகள் உலக நாடுகளில் இருந்து துபாய் வருவதற்கு எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்தால் ஒவ்வொரு பயணிக்கும் தலா ஒரு கண்காட்சிக்கான டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் குஷியாகியுள்ளனர். Expo 2020 டிக்கெட் பெற வரும் அக்டோபர் 1 முதல் மார்ச் 31க்குள் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு பயணித்திருக்க வேண்டும். துபாய் வழியாக கனெக்டிங் விமானத்தில் செல்ல குறைந்தபட்சம் 6 மணி நேரம் காத்திருந்தாலும் இந்த Expo 2020 டிக்கெட்டை பெறலாம். இதற்கு எமிரேட்ஸ்-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்தால் மெயில் மூலம் டிக்கெட் அனுப்பி வைக்கப்படும் என எமிரேட்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் மூலம் டிக்கெட் பெறுவோர் ஏதேனும் ஒரு நாளில் விருப்பம்போல கண்காட்சியை கண்டு மகிழலாம்!

Emirates Economy Class Review: What's Emirates Economy Like? | Sand In My SuitcaseExpo 2020 டிக்கெட் எவ்வளவு?

எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 2022 மார்ச் 31 வரை நடைபெற உள்ள இந்த மெகா கண்காட்சிக்கு உலகம் முழுவதும் கடந்த ஜூலை 18ம் தேதி முதலே டிக்கெட் விற்பனை மும்முரமாக தொடங்கிவிட்டது. 3 வகையான டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாள் மட்டும் சென்று வரை 95 திர்ஹம் கட்டணமும் ஒரு மாதத்திற்கு 195 திர்ஹம் கட்டணமும் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் சென்று வர 135 திர்ஹமும் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் இலவசமாக Expo 2020 கண்காட்சியை கண்டுகளிக்கலாம். www.expo2020dubai.com எனும் இணையதளம் வாயிலாக டிக்கெட்களை இப்போதே பெற்றுக்கொள்ளலாம்!

EXPO 2020 Dubai குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்..

3 Shares
Share via
Copy link