UAE Tamil Web

மும்பை – துபாய் விமானத்தில் தனியாக பயணித்தவரின் வெற்றி பயணம் ஒரு கண்ணோட்டம்..!

bhavesh

மும்பையில் இருந்து துபாய்க்கு தனி ஒரு நபராக விமானத்தில் பறந்ததன் மூலம் பவேஷ் ஜாவேரி வைரலாக பேசப்படலாம் ஆனால் இவர் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானது.

துபாய் என்றாலே நிறைய எழுச்சியூட்டும் கதைகள் நம் நினைவிற்கு வருவது வழக்கம் தான். வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு ஏற்ற ஒரு இடமென்றால் அது துபாய் என்று சொல்லலாம். இதில் இவரது வாழ்க்கை பயணமும் ஒன்றாகும்.

கொஞ்சம் கூட கையில் பணமில்லாமல் வேலை தேடி துபாய்க்கு வந்த ஜாவேரி, ஜுவல்லரி கடை ஒன்றில் 1600 திர்ஹம்ஸ் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். அல்லும் பகலும் ஓடாய் தேயுமளவிற்கு உழைத்த இவர் 2004 ஆம் ஆண்டு தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதிலிருந்து இவரின் வாழ்க்கை வேற லெவலுக்கு மாறியது.

தற்போது இவர் வருடத்திற்கு 650 மில்லியன் டாலர் அதாவது 2.4 பில்லியன் திர்ஹம்ஸ் வர்த்தகம் நடைபெறக்கூடிய துபாயிலுள்ள ஸ்டார் ஜெம்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருக்கிறார்.

20 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் ஜாவேரி தனி விமானத்தில் தனியாக பயணம் செய்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பவேஷ் ஜாவேரி கூறுகையில், “விமான நிலையத்தில் நுழைந்தவுடன் விமானத்தில் நான் மட்டும் தனியாக இருப்பதை உணர்ந்தேன். இது எனக்கு ஒரு தனித்துவமான உணர்வை தந்தது. இதை பணத்தால் வாங்க முடியாது என்பதை உணர்ந்தேன். இது மிகவும் உற்சாகமாக இருந்தது. இதை சிறிய வீடியோவாக எடுத்து எனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்” என்று கோல்டன் விசா வைத்திருக்கும் பவேஷ் ஜாவேரி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

bhavesh
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap