UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – UAE இடையே மறுஅறிவிப்பு வரும்வரையில் விமானங்கள் இயக்கப்படாது – எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூலை 7 ஆம் தேதி முதல் இந்தியா – அமீரகம் இடையே விமான சேவையை துவங்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மறுஅறிவிப்பு வரும்வரையில் இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாது என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 14 நாட்களில் இந்தியா வழியாக பயணம் செய்தவர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமீரக குடிமக்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், அரசு பிரதிநிதிகள் ஆகியோருக்கு இந்தத் தடையில் விலக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அமீரக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும் ஜூலை 21 ஆம் தேதிவரையில் இந்தியா – அமீரகம் இடையே விமானங்கள் இயக்கப்படாது என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல இந்தியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 14 நாட்களுக்குச் செல்ல தனது குடிமக்களுக்குத் தடை விதித்திருக்கிறது அமீரக அரசு.

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap