UAE Tamil Web

கண்கவர் பெயிண்டிங் மூலம் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் எக்ஸ்போ விளம்பரம்!

உலகின் பிரம்மாண்ட கண்காட்சிகளில் ஒன்றான துபாய் எக்ஸ்போ நாளை மறுநாள் முதல் கோலாகலமாக தொடங்குகிறது. 6 மாதங்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருகை தர இருக்கின்றனர். வெளிநாட்டினர்களை மேலும் ஈர்க்கும் விதமாக துபாய் அரசின் ஏர்லைன்ஸ் நிறுவனமான எமிரேட்ஸ் விமானம் தற்போது கண்கவர் பெயிண்டிங்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 7 நிற பெயிண்டிங் மூலம் துபாய் எக்ஸ்போ குறித்து முதல்முறையாக வடிவமைக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஏ380 விமானத்த்தின் புகைப்படத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு பல வண்ண நிறங்களில் காட்சியளிக்கும் விமானத்தில் துபாய் எக்ஸோ நடைபெறும் தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Emirates-Expo-livery-750x450

மேலும் புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் நின்று விளம்பரம் செய்த பெண்மணியின் புகைப்படத்தையும் எமிரேட்ஸ் நிறுவனம் விமானத்தில் பொறிக்கச் செய்து கவுரவப்படுத்தியுள்ளது. இதேபோன்று எமிரேட்ஸ் விமானங்கள் பலவற்றிலும் வண்ணங்கள் பூசப்பட இருப்பதாகவும் ஒரு விமானத்தை தயார் செய்ய 16 நாட்கள் பிடிப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முதல்முறையாக எக்ஸ்போ 2020 விளம்பரத்தை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஏர்பஸ் ஏ380 ரக விமானம் இன்று துபாயில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட இருக்கிறது

3 Shares
Share via
Copy link