UAE Tamil Web

இந்தியா – UAE இடையே விமானங்களை மீண்டும் இயக்க இருப்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவிப்பு..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமானப் போக்குவரத்திற்கு அமீரக அரசு தற்காலிக தடைவிதித்தது. இந்தத் தடையை ஜூன் 23 ஆம் தேதிமுதல் விலக்கிக்கொள்வதாக துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று அறிவித்தது.

இதனையடுத்து துபாயை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூன் 23 ஆம் தேதிமுதல் இந்தியா – அமீரகம் இடையே விமானங்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட பயண விதிமுறைகளை எமிரேட்ஸ் வரவேற்கிறது. இதனையடுத்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவில் இருந்து அமீரகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும். தற்போதுள்ள சூழ்நிலையை ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap