இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட 12 நாடுகளில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் பயணிகள், 48 மணிநேர செல்லுபடியாகும் கோவிட்-19 பிசிஆர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியா , பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, சூடான், யுனைடெட் கிங்டம் (UK), வியட்நாம் மற்றும் ஜாம்பியா ஆகும்.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, சூடான் மற்றும் ஜாம்பியாவிலிருந்து வருபவர்களின் கோவிட் 19 RT PCR சான்றிதழில் QR குறியீடு இருக்க வேண்டும்.
ஜனவரி 2, 2022 முதல், இங்கிலாந்தில் இருந்து துபாய்க்குப் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கோவிட் 19 PCR சோதனைச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும், மேலும் அந்தச் சான்றிதழ் (Reverse Transcription Polymerase Chain Reaction) ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷனுக்கான (RT PCR) சோதனையாக இருக்க வேண்டும்.
(RT PCR) சோதனை முடிவு சான்றிதழில் மாதிரி எங்கு எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து NHS கோவிட் 19 சோதனைச் சான்றிதழ்கள் ஏற்கப்படாது.