37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

இந்தியா – அமீரகம் இடையே சிறப்பு விமானங்களை இயக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு..!

emiratesboeing777

ஜூலை 12 – 26 ஆம் தேதிகளில் இந்தியர்கள் அமீரகம் – இந்தியா இடையே பயணிக்க ஏதுவாக சிறப்பு விமானங்களை இயக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தனது இணையதளத்தில் இதுகுறித்து தகவல் வெளியிட்டிருக்கும் எமிரேட்ஸ், அமீரகத்திலிருந்து இந்தியா செல்லும் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலமாக அமீரக வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குப் பயணிக்கலாம் எனவும், அதே விமானங்களின் மூலமாக தற்போது இந்தியாவில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் அமீரக குடிமக்கள் அமீரகம் திரும்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு, டெல்லி, கொச்சி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு ஜூலை 12- 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் விமானங்களின் பயண அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு (ஒரு நாளைக்கு 2 விமானங்கள்)

டெல்லி (ஒரு நாளைக்கு 2 விமானங்கள்)

கொச்சி (ஒரு நாளைக்கு 2 விமானங்கள்)

மும்பை (ஒரு நாளைக்கு 3 விமானங்கள்)

திருவனந்தபுரம் (ஒரு நாளைக்கு 1 விமானம்)

பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை மாநில அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

பயணிக்க விரும்புவோர் எமிரேட்சின் இணையதளம் மூலமாகவோ, முகவர்கள் மூலமாகவோ, எமிரேட்சின் விற்பனை அலுவலகம் மூலமாகவோ டிக்கெட்டினை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தாங்கள் செல்லும் நாடு அளித்திருக்கும் பயண விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றியவர்கள் மட்டுமே பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

துபாய் – இந்தியா

அமீரகத்தில் தவித்துவரும் இந்திய மக்கள் மட்டுமே இந்த சிறப்பு விமானங்கள் மூலமாக மேற்கண்ட ஐந்து இடங்களுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியா – துபாய்

இந்தியாவில் இருக்கும் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த விமானங்கள் மூலமாக அமீரகம் திரும்ப, பயணி துபாய் குடியிருப்பாளராக இருக்கும்பட்சத்தில் குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குனரகத்திடம் (GDFRA) அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

மற்ற எமிரேட்டுக்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ICA விடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து துபாய் திரும்ப விரும்பும் பயணிகள் பயண தேதிக்கு 96 மணிநேரத்திற்கு முன்னர் தங்களை கொரோனா பரிசோதனைக்கு (RT-PCR) உட்படுத்திக்கொண்டு, பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்ததை பயணத்தின்போது காண்பிக்க வேண்டும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் மட்டுமே கொரோனா பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கு பயணிக்க மற்றும் துபாயில் இருந்து பயணிக்க விரும்புவோர் இதுகுறித்து தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள மற்றும் இதுகுறித்த மேலதிக தகவல்களை பெற எமிரேட்ஸ் இணையதளம் அறிவித்துள்ள இணைய முகவரிக்கு செல்லவும்.

இதையும் படிங்க.!