UAE Tamil Web

சிறந்த விமான நிறுவனத்திற்கு வழங்கப்படும் “பெஸ்ட் ஏர்லைன் வேர்ல்ட்வைட்” விருது – தொடர்ந்து 8 வது முறையாக விருதைத் தட்டிச்சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்..!

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்த வருடத்திற்கான “பெஸ்ட் ஏர்லைன் வேர்ல்ட்வைட்” பரிசை தட்டிச் சென்றிருக்கிறது. பிசினஸ் டிராவலர் மிடில் ஈஸ்ட் அவார்ட்ஸ் 2021 அமைப்பு  வழங்கும் இவ்விருதை தொடர்ந்து 8 வது முறையாக எமிரேட்ஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சிறந்த ஃபர்ஸ்ட் கிளாஸ் கொண்ட விமான நிறுவனம் (Airline with the Best First Class), சிறந்த எக்கானமி கிளாஸ் கொண்ட விமான நிறுவனம் (Airline with Best Economy Class) ஆகிய பிரிவிலும் எமிரேட்ஸ் விருதினை வென்றிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் பையோமெட்ரிக் வழிகள் மற்றும் தொடுதல் இல்லா செக்-இன் போன்ற முன்னெடுப்புகளை எமிரேட்ஸ் சிறப்பாக எடுத்துவருகிறது.

துபாய் விமான நிலையத்தில் செக்-இன் முதல் கேட் வரையில் 33 பையோ மெட்ரிக் செக் பாய்ண்ட்கள், 50 தொடுதல் இல்லா கியோக்ஸ் (kiosks) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தடுப்பூசி அட்டைகள் மற்றும் PCR பரிசோதனை அறிக்கைகள் போன்ற கொரோனா வழிமுறைகளை ஒழுங்குபடுத்தவும் பயண விதிமுறைகளை இலகுவாக்கவும் நிறுவனங்கள் மற்றும் அரசுடன் இணைந்து பணியாற்றிவருவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில்  IATA டிராவல் பாஸ் முறையை எமிரேட்ஸ் பயன்படுத்தத் துவங்கியது. மே மாத இறுதிக்குள் தன்னுடைய அனைத்து விமான சேவைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பரிமாறிக்கொள்ள துபாய் சுகாதார ஆணையத்துடன் இணைந்து முயற்சித்து வருவதாகவும் செக் இன் பாய்ண்ட்களில் காகிதம் இல்லா முறையை கொண்டுவர இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசினஸ் டிராவலர் மிடில் ஈஸ்ட் அவார்ட்ஸ் அமைப்பானது, விமான நிறுவனம், விமான நிலையம், ஹோட்டல்கள், நம்பிக்கை மிகுந்த பணியாளர்கள் முதலிய வகைமைகளை கணக்கில்கொண்டு விருதளிக்கிறது. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொண்ட காணொளிக் காட்சி கூட்டம் மூலமாக இந்த விருதளிக்கும் விழா நடைபெற்றது.