UAE Tamil Web

வீட்டில் திருமண விருந்து : சோசியல் மீடியாவில் பரவிய புகைப்படம் : நேரில் சென்று “வாழ்த்திய” போலீஸ்..!

marriage

ஷார்ஜா: கொரோனா கொடுங்காலத்திற்கு மத்தியில் வீட்டிலேயே திருமண விருந்து ஒன்றினை ஏற்படுத்திய அமீரகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை கைது செய்திருக்கிறது. விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் குதூகலத்தின் உச்சியில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதனை ஷார்ஜா காவல்துறையும் பார்த்திருக்கிறது. அத்துடன் நேராக விருந்து நடைபெறும் இடத்திற்குச் சென்ற காவல்துறை விருந்துக்கு ஏற்பாடு செய்தவரைக் கைது செய்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், விளையாட்டு உள்ளிட்ட சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள அமீரக அரசு அனுமதியளித்திருந்தாலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்கவேண்டும் என அரசு தெரிவித்திருந்தது.

மேற்கூறிய விருந்தினர்கள் யாரும் முகக்கவசம் அணியவோ, சமூக இடைவெளியை பின்பற்றவோ இல்லை. அதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை அவர்களே வெளியிட்டது தான் இப்படி ட்விஸ்ட் ஆகியிருக்கிறது.