ஷார்ஜாவை அடுத்த கோர்ஃபக்கான் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா முகமது அலி. 97 வயதான இவர் தனது 80வது வயதில் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசலுக்கு 600 மீட்டர் தூரம் தினமும் நடந்து சென்று குர்ஆனை மனனம் செய்ய தொடங்கினார். 90வயதை எட்டியபோது நடக்க முடியாமல் சிரமப்பட்ட ஃபாத்திமா, பேரக்குழந்தைகளின் உதவியால் வீட்டிலேயே ஆர்வமாக மனனம் செய்து வந்தார்.
இதுதவிர தள்ளாத வயதிலும் பள்ளிவாசல்களை கட்டியது,
ஏழை எளியோருக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் அவர் செய்து வந்தார். இந்த நிலையில் 97வயது எட்டிய ஃபாத்திமா வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். கடந்த 17 ஆண்டுகளில் மட்டும் குர்ஆனில் 15 ஜூசூக்களை அவர் மனனம் செய்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
