UAE Tamil Web

“நீங்க செஞ்சது பெரிய விஷயம்” – பணியாளரைப் பாராட்ட அவரது அலுவலகத்திற்கே சென்ற மூத்த காவல்துறை அதிகாரிகள்..!

MOHAMED

சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையினை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஏமிராட்டியை அவரது நிறுவனத்திற்கே நேரில் சென்று துபாய் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஷேக் சயீத் சாலையில் இருந்த ATM ஒன்றின் வெளியே பை கிடப்பதை முகமது சலே அல் வக்தி பார்த்திருக்கிறார். உடனே அதனை கையில் எடுத்த அவர், அதனுள் 45,800 திர்ஹம்ஸ் பணமும் 70,000 திர்ஹம்ஸ்க்கான காசோலை ஒன்றும் இருப்பதை அறிந்திருக்கிறார்.

உடனடியாக அல் பர்ஷா காவல்நிலையத்திற்குச் சென்று, பையை ஒப்படைத்திருக்கிறார் முகமது. இது தன்னுடைய கடமை என்றும் பை, அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முகமதுவின் செயலை அறிந்த அல் பர்ஷா காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அப்துல் ரஹ்மான் பின் ஷஃபி, முகமது பணிபுரியும் அல் பர்ஷா மாலுக்கு மூத்த அதிகாரிகளுடன் சென்று அவரைப் பாராட்டியிருக்கிறார்.

நேர்மையுள்ள மக்களை அவர்களது பணியிடங்களுக்கே சென்று, வாழ்த்தும் துபாய் காவல்துறையின் திட்டமான “We reach you to thank you” என்பதன் அடிப்படையில் முகமதை அவரது பணியிடத்தில் சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்திருக்கிறது துபாய் காவல்துறை.

“தனிநபர்களிடம் பொறுப்புணர்வை வளர்க்கும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவதை துபாய் காவல்துறை தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது” என ஷஃபி தெரிவித்தார்.

MOHAMED
3 Shares
Share via
Copy link