UAE Tamil Web

தீப்பற்றியெரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட குடும்பத்தை தனியாளாக காப்பாற்றிய நபர் – நேரில் வரவழைத்து பாராட்டிய அமீரக காவல்துறை..!

NAT-Emirati-man-honoured

அஜ்மானில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட அரபு குடும்பத்தை அமீரகத்தைச் சேர்ந்த அகமது முகமது அல் ரைசி தனியாளாக காப்பாற்றியிருக்கிறார். அவரது இந்த துணிச்சலான நடவடிக்கையை பாராட்டும் வகையில் அஜ்மான் சிவில் பாதுகாப்புத்துறை அவருக்கு பரிசு வழங்கி சிறப்பித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய அஜ்மான் சிவில் பாதுகாப்புத்துறையின் தலைமை இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல் அஜீஸ் அல் ஷம்சி,”அவர் (அகமது முகமது அல் ரைசி) ஒரு சிவில் பாதுகாப்பு வீரர் எப்படி செயல்படுவாரோ அதன்படியே செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு குடிமகனும் சிவில் பாதுகாப்புப் படையின்  மனிதாபிமான செயல்களுக்கு துணைநிற்க வேண்டும். ரைசி அவர்களுக்கு நன்றி. கஷ்டத்தில் தவிப்பவர்களை காப்பாற்றுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். அதுவே தேசபக்தி” என்றார்.

அகமது முகமது அல் ரைசி அவர்களின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு பாராட்டுப்பத்திரம் ஒன்றையும் நினைவுக் கேடயம் ஒன்றையும் அப்துல் அஜீஸ் அல் ஷம்சி வழங்கினார்.