UAE Tamil Web

அமீரகம் : ஈத் தொழுகை மையத்தில் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி – காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

media-handler

புஜைராவில் உள்ள ஈத் தொழுகை ஹாலின் பின்புறத்தில் 39 வயது ஏமிராட்டி ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்ததாக புஜைரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்த விசாரணைகள் சூடு பிடித்திருந்த நிலையில் இது கொலைதான் என காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

என்ன நடந்தது?

தொழுகை மையத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டவர் நின்றிருந்த வேளையில் 31 வயது சீன நபர் அங்கே வந்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவரிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தினை கொடுக்குமாறு திருடன் மிரட்டியிருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த ஏமிராட்டி ஆண், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது சீன நபர் கையில் இருந்த துப்பாக்கியை இயக்கியிருக்கிறார். இதன்காரணமாக குண்டடிபட்டு ஏமிராட்டி ஆண் அங்கேயே விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றின் மூலம் குற்றவாளியை 2 நாட்களுக்குள் புஜைரா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், குற்றவாளி இன்னொரு இடத்திலிருந்து துப்பாக்கியை திருடியதாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கி திருடப்பட்ட இடத்தையும் குற்றவாளி மூலமாக காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பொதுவழக்குத்துறை விசாரணைக்கு குற்றவாளி உட்படுத்த இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

media-handler
0 Shares
Share via
Copy link