UAE ராஸ் அல் கைமாவில் பயங்கர சாலை விபத்து..!!

Emirati woman killed, her sister injured in horrific UAE road crash

ராஸ் அல் கைமாவுக்கு தெற்கே 125 கி.மீ தொலைவில் உள்ள அல் ஹூயலத் (Al Huwyalat) பகுதியில் இன்று வியாழக்கிழமை நடந்த பயங்கர சாலை விபத்தில் 42 வயது எமிராட்டி பெண் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி ராஸ் அல் கைமா காவல்துறையின், போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் அஹ்மத் சம் அல் நக்பி கூறுகையில், வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஆபரேஷன்ஸ் அறைக்கு அழைப்பு வந்ததாக கூறினார்.

இதில் எம்.எஸ்.கே என்று அறியப்படும் எமிராட்டி பெண், தனது சகோதரியுடன் (38 வயது) பயணம் செய்து கொண்டிருந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பல முறை சாலையில் உருண்டு இந்த ​​விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் எமிராட்டி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் அடக்கம் செய்ய ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அவரது சகோதரி பலத்த காயங்களுடன் மருத்துவமனை அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கூடுதல் நடவடிக்கைகளுக்காக பொது வழக்கு விசாரனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Source : Gulf News