கோர்ஃபக்கானில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் வாகனம் கவிழ்ந்து எரிந்ததில் இரண்டு அமீரக வாசிகள் பலத்த காயங்களுக்குள் ஆளாகினர்.
நேற்று அதிகாலை கோர்ஃபக்கன் பகுதியில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரிகளின் தீவிர பணியால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக கோர்ஃபக்கான் காவல் நிலையத் தலைவர் கர்னல் சயீத் ரஷீத் அல் யஹ்யாயி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:50 மணிக்கு கிழக்குப் பிராந்திய காவல் துறையின் செயல்பாட்டு அறைக்கு கார்னிச் கோர்ஃபக்கான் தெருவில் விபத்து நடந்ததாகவும் வாகனம் தீப்பிடித்து எறிவதாகவும் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து ரோந்து படை, சிவில் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ்கள் காவல்துறைக்கு விரைந்தன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து, விபத்துக்குள்ளான காரில் இருந்த இருவரையும் மீட்டனர்.
காயமடைந்த அமீரக வாசிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க கோர்ஃபக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிக வேகம் காரணமாக வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் வாகனம் திடீரென தடுமாறி வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்தது.