UAE Tamil Web

அவங்க தான் First… தனியார் நிறுவனங்களுக்கு செக் வைத்த அமீரகம்… ஆட்டம் காணுமா இந்திய ஊழியர்களின் நிலைமை?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மனிதவளத்துறை மற்றும் எமிரேட்டிசேசன் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2026க்குள் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதமாக இருக்க வேண்டும். இதை தவறும் நிறுவனங்களுக்கு இப்போது விதிக்கப்படுவதை விட அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களுக்கு உள்நாட்டு எமிரேட்ஸ் ஊழியர்களின் எண்ணிக்கையை 2 சதவீதமாக உயர்த்த டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த ஒழுங்குமுறையை செய்யாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. இது நியமிக்கப்படாத ஒவ்வொரு ஊழியர்களை கணக்கில் வைத்து மாதம் ஒன்றுக்கு 6,000 திர்ஹம்ஸ் வீதம் ஆண்டுக்கு 72,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அமைச்சகம் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

 

இதற்கிடையில், MoHRE இன் எமிரேடிசேஷன் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் சைஃப் அல் சுவைடி, தனியார் துறை நிறுவனங்கள் தொடர்ந்து உள்நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எமிரேடிசேஷன் விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்தினால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிக அபராதத்தைத் தவிர்க்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சகத்தின் தகவலின்படி, தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மாதாந்திர நிதி பங்களிப்புகளின் மதிப்பு 2026 ஆம் ஆண்டு வரை “வருடா வருடம் 1,000 திர்ஹம்ஸ் என்ற விகிதத்தில் படிப்படியாக அதிகரிக்கும்”. இதன்மூலம் உள்நாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 2026 இறுதிக்குள் மொத்த ஊழியர்களில் 10 சதவீதமாக்கும் முயற்சி எனக் கூறப்படுகிறது.

எமிரேடிசேஷன் பார்ட்னர்ஸ் கிளப்பில் சேர்வது உட்பட, ‘நஃபிஸ்’ திட்டத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்துவதில் சாதனைகளைச் செய்யும் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகளையும் அமைச்சகம் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap