விசா இல்லாமல் 90 நாட்கள் தங்கலாம் – எக்குவடோரியல் கினியா அறிவிப்பு!

Equatorial Guinea announces 90-day visa-free stay for select Emiratis

தேர்ந்தெடுக்கப்பட்ட அமீரக வாசிகள் 90 நாள் விசா இல்லாமல் தங்கலாம் என்று எக்குவடோரியல் கினியா (Equatorial Guinea) அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) மற்றும் எக்குவடோரியல் கினியா (Equatorial Guinea) குடியரசிற்கு இடையிலான பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தம் 2019 ஜூலை 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் திங்களன்று அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஐக்கிய அரபு நாட்டு மக்கள் எக்குவடோரியல் கினியா (Equatorial Guinea) குடியரசிற்கு விசா இல்லாமல் பயணம் செய்து 90 நாட்கள் தங்கலாம்.

இந்த ஒப்பந்தத்தில் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் சர்வதேச அமைப்பு விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Yacoub Yousef Al Hosani (யாகூப் யூசப் அல் ஹொசானி) மற்றும் எக்குவடோரியல் கினியா(Equatorial Guinea) குடியரசு அரசாங்கம்
HE Simeon Ayuno Asuno Angie (எச்.இ. சிமியோன் அயுனோ அசுனோ ஆங்கி) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

விசா விலக்கு ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் வழங்கியுள்ள சிறப்பு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் / சேவையை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் இரு நாடுகளுக்கும் சென்று வரலாம். மேலும், அங்கேயே 90 நாட்கள் தங்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த விசா விலக்கு மூலமாக உலகிலேயே மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Loading...