UAE Tamil Web

துபாய் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் புதிய சலுகை – Esaad கார்டு தள்ளுபடி திட்டத்தில் பயனடையலாம்

துபாயில் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சுகாதார சேவைகள் மற்றும் பள்ளிக் கட்டணம் முதல் விமானங்கள் மற்றும் தீம் பார்க் வருகைகள் வரை அனைத்திலும் தள்ளுபடி வழங்கும் தள்ளுபடி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திறமையாளர்களை நாட்டிற்கு ஈர்ப்பதற்கான பரந்த முயற்சிக்கு ஏற்ப, ஐந்து மற்றும் 10 வருட கோல்டன் விசாவைப் பெறுபவர்களுக்கு Esaad சலுகை அட்டையை இலவசமாக வழங்குவதாக துபாய் அரசாங்கம் கடந்த திங்களன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

UAE மற்றும் உலகளவில் 92 நாடுகளில் உள்ள 7,237 பிராண்டுகள் மற்றும் வணிகங்கள் வழங்கும் தள்ளுபடிகளை அனுபவிக்க பச்சை மற்றும் தங்க அட்டையைப் பயணங்களால் பயன்படுத்தமுடியும்.

துபாயின் நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் அப்துல்லா அல் பஸ்தி கூறுகையில், “ஊக்கத்தொகைகள் கோல்டன் விசா வைத்திருப்பவர்களை துபாயின் பரந்த பொருளாதாரத்தில் தொடர்ந்து பங்களிக்க ஊக்குவிக்கும் என்றார். மேலும் “உலகம் முழுவதிலுமிருந்து புதிய மற்றும் தனித்துவமான திறமைகளை நமது நகரத்திற்கு ஈர்க்கவும் அவை உதவும்” என்றார்.

Esaad Card என்றால் என்ன?

இந்த அட்டையானது துபாய் காவல்துறையால் 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2017ம் ஆண்டு காவல்துறை படையின் ஊழியர்களுக்கு பலவிதமான தள்ளுபடிகளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பல ஆண்டுகள் upgrade செய்யப்பட்டு அரசாங்க ஊழியர்களை உள்ளடக்கியதாக விரிவடைந்து, பின் பொது மற்றும் தனியார் துறை வேலைகளில் இருந்து இராணுவம் மற்றும் சிவிலியன் ஓய்வு பெற்றவர்கள், அத்துடன் ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் என எமிரேட்டில் உள்ள குடிமக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் தற்போது உள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap