UAE Tamil Web

49 மணி நேர தேசிய தின விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ள எதிஹாட் ஏர்வேஸ்.! வெறும் 49 திர்ஹம்ஸ் செலவில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்..

ethihad

அமீரகம் வரும் டிசம்பர் 2-ம் தேதி தனது 49-வது தேசிய தினத்தை கொண்டாடவுள்ளது. இதனையொட்டி அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ், 49 மணி நேர தேசிய தின விற்பனையை(National Day sale) துவக்கியுள்ளது. இன்று (நவம்பர் 11) காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த விற்பனை நவம்பர் 13-ம் தேதி காலை 10 மணியுடன் முடிய உள்ளது.

- Advertisment -

தேசிய தின சிறப்பு விற்பனையை முன்னிட்டு எதிஹாட் ஏர்வேஸ் வழங்கும் சலுகையில் பல விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த 49 மணி நேர சலுகை விற்பனையில் பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டை(குறைக்கப்பட்ட கட்டணம்) வெறும் 49 திர்ஹம்ஸ் டெபாசிட் தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். எதிஹாட் ஏர்வேஸின் வெப்சைட்டிற்கு www.etihad.com சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பின்னர் பயண தேதிக்கு 21 நாட்கள் முன் மீதமுள்ள கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம். அமீரகத்தின் 49-வது தேசிய தினத்திற்காக எதிஹாட் வழங்கும் இந்த 49 மணி நேர சிறப்பு விற்பனையை ,2021 செப்டம்பர் 30-க்கு முன் பயணம் மேற்கொள்வோர் பயன்படுத்தி கொள்ளலாம்.

அபுதாபியில் இருந்து பெய்ரூட் செல்வதற்கன கட்டணம் வெறும் 1,249 திர்ஹம்ஸிலிருந்தும், ஏதென்ஸ் செல்ல 2,449 திர்ஹம்ஸ், மாலத்தீவுக்கு 3,049 திர்ஹம்ஸ் கட்டணத்திலிருந்தும் துவங்குகிறது.அதே போல இந்த விற்பனையில் ரிட்டர்ன் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களிலும் விலைக் குறைப்புக்கள் உள்ளன. இதில் அபுதாபி முதல் கெய்ரோவிற்கு 5,349 திர்ஹம்ஸ், அபுதாபி முதல் பெய்ரூட் வரை 6,649 திர்ஹம்ஸ், அபுதாபி முதல் அம்மானுக்கு 6,649 திர்ஹம்ஸ் கட்டணமாக உள்ளது.

மேலும் எதிஹாட் ஹாலிடேஸ் பேக்கேஜ்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் எதிஹாட் விமான பயணம் மற்றும் கெய்ரோ, ஏதென்ஸ் மற்றும் மாலத்தீவில் உள்ள சில ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 3 இரவுகள் தங்குவதற்கான டீலை பெறலாம்.

உள்நாட்டிலும் எதிஹாட் பலவிதமான தங்குமிட டீல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அபுதாபி மற்றும் துபாய் முழுவதும் பரவலான ஹோட்டல்களில் காலை உணவு உட்பட ஒரு இரவு தங்கும் வசதி 149 திர்ஹம்ஸ் சலுகை விலையில் கிடைக்கின்றது.

சிறப்பு விற்பனையில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு பயணத்தேதி மற்றும் செல்லும் இடங்களில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். டெபாசிட் தொகையை திரும்ப பெற இயலாது. மேலும் ஹாலிடேஸ் பேக்கேஜ்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.