‘நேரம் தவறாமை’ என்ற சிறப்பு அந்தஸ்தை தட்டி சென்ற அமீரகத்தின் தேசிய விமானமான Etihad ஏர்வேஸ்!

Etihad Airways most punctual airline in Middle East for first half of 2019

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான Etihad விமானம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மிகவும் சரியாக மற்றும் முறையாக இயங்கியுள்ள மத்திய கிழக்கு விமானம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

OAG தரவு விவரங்களின்படி மத்திய கிழக்கு விமானங்களில் Etihad விமானம் மட்டுமே மற்ற விமானங்களை விட 80 சதவீதத்திற்கு அதிகமாக நேரம் தவறாமல் இயங்கக் கூடிய விமானம் என்ற உயரிய இடத்தை அடைந்துள்ளது.

இந்த OAG -யினால் கண்காணிக்கப்படும் விமானங்களில் Etihad விமானம் உலக அளவில் சிறந்த On Time Performance -காக 24 வது இடத்தை கடந்த ஜூலை மாதம் பிடித்தது.

Etihad ஏர்வேஸ் மற்றும் உலகலாவிய விமான நிலையங்கள் மற்றும் நெட்வொர்க் செயல்பாடுகளின் துணைத் தலைவர் ஜான் ரைட் கூறுகையில், “Etihad ஏர்வேஸ் ஒரு உயர்தரமான விமான நிறுவனம் மற்றும் நம்பகத்தன்மை என்பது நாங்கள் வழங்கும் மொத்த சேவையின் ஒரு முக்கிய அங்கம் ஆகும். மேலும், நாங்கள் தொடர்ந்து எங்கள் விருந்தினர்களுக்கு வானிலும் மற்றும் தரையிலும் சிறந்த முறையில் சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.

மத்திய கிழக்கு விமானங்களில் 4 விமான நிறுவனங்கள் OAG இன் சிறந்த 50 சரியான நேரங்களில் செயல்படும் விமானங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Loading...